பண்டிகை கொண்டாட்டத்தில் பளபளப்பாக உலா வர... !
நெருங்கிவிட்டது பொங்கல் பண்டிகை. தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு உற்சாகத்துடன் களைகட்டும். அப்போது பொலிவான சருமத்துடன், அழகு தேவதைகளாக உலா வர அசத்தலான டிப்ஸ்கள் சில இதோ...
எந்த ஒரு மேக்கப்பையும் 'சுத்தமான சருமத்துடன் துவங்க வேண்டும்' என்பது பியூட்டீசியன்களின் முக்கிய அட்வைஸாகும். எனவே, தரமான பேஸ் வாஷ் மூலமாக சருமத்தை முதலில் சுத்தப்படுத்த வேண்டும்.
குறைந்த நேரத்தில் நன்மையளிக்கும் பொருட்கள் சருமத்தில் எளிதாக ஊடுருவ பேஸ் மாஸ்க்குகள் உதவுகின்றன. இதனால், சருமம் புத்துயிர் பெறுவதுடன், பளபளப்பாகவும் ஜொலிக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமைதிப்படுத்தும் பொருட்களால் சருமத்தை நிரப்ப ஒரு லேசான டோனர் உதவுகிறது. இதனால், சருமத்தில் உள்ள துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, பளபளப்பு கிடைக்கிறது.
சருமம் நீரேற்றமாக இருந்தால் மட்டுமே ப்ரஷ் தோற்றம் கிடைக்கும். எனவே, சருமத்தை நீரேற்றமாக வைப்பதும் மிகவும் அவசியமானது. இதற்கு, அவ்வப்போது போதியளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
மேலும், எளிமையான தண்ணீர் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாய்ஸ்சரைசர் உங்களின் துளைகளை அடைக்காமல், சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவும்.
ஃப்ரீ-ரேடிக்கல் பாதுகாப்பை அதிகரிக்கவும், தோல்களில் புதிய செல்களை மீண்டும் உருவாக்கவும் பேஸ் ஆயில்கள் உதவுகின்றன. முகம் மட்டுமின்றி கழுத்துக்கும் ஈரப்பதம் தேவை.
கற்றாழை ஜெல்லை நேரடியாகவே அல்லது கிரீம்களாகவோ பயன்படுத்தினால், சருமம் மென்மை அடைவதை உணரலாம்.
கன்சீலரைப் பயன்படுத்தும்போது மடிப்புகள் ஏற்படாமல் இருக்க, உங்கள் கண்களுக்குக் கீழுள்ள பகுதியில் ஈரப்பதம் இருப்பது முக்கியமானது. குறைந்தளவில் புத்துணர்ச்சியூட்டும் ஐ கிரீமால் அங்கு மசாஜ் செய்யலாம்.