பல்லில் சீழ் பிடிப்பதை எவ்வாறு சரி செய்வது?
சீழ்பிடித்த பல் என்பது பாதிக்கப்பட்ட பல்லாகும். இந்த தொற்று பல் சிதைவு, ஈறு நோய் அல்லது விரிசல் பல் ஆகியவற்றால் ஏற்படலாம்.
இந்தப் பிரச்னை பல்லின் அடிப்பகுதியில் பாக்டீரியாவை ஏற்படுத்தி, அதன் கூழ் சேதமடைந்து, பல்லின் அடிப்பகுதி வேரின் நுனியில் சீழ் படிவதற்கு வழிவகுக்கிறது.
தாடை எலும்பில் சீழ் படிதல் சீழ்ப்பிடிப்பு என்று அழைக்கப்படுகிறது.
சிகிச்சையளிக்கப் படாவிட்டால், சீழ்பிடித்த பற்கள், ஈறுகள் மற்றும் தாடையில் கடுமையான தொற்றுக்கு வழிவகுக்கும்.
பாதிக்கப்பட்ட பல்லைச் சுற்றி வலி மற்றும் வீக்கம், ஈறு சிவத்தல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுதல் ஆகியவை சீழ்பிடித்த பல்லின் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
சீழ்பிடித்த பல்லுக்கு வேர் கால்வாய் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது .