ஆடி ஸ்பெஷல் ஆடிப்பால் ரெசிபி இதோ!

தேவையானவை: தேங்காய் - ஒன்று, துருவிய வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, பச்சரிசி அல்லது பாசிப்பருப்பு - ஒரு மேஜை கரண்டி.

செய்முறை: தேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பு அல்லது பச்சரிசி சேர்த்து நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும்.

அந்த சக்கையை சிறிதளவு நீர்விட்டு மீண்டும் அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும். மீண்டும் ஒரு முறை இதேபோல் செய்யவும்.

மொத்தம் மூன்று முறை எடுத்த பாலையும், ஒன்றாக சேர்த்து கலந்து வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, சிறிதளவு நீர்விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

வெல்லம் கரைந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி ஏலக்காய்த்துாள் சேர்த்து நுரைத்து வரும்போதே இறக்கி விடவும். ஆடிப்பால் ரெடி

புதிதாக திருமணமான மணப்பெண் - மாப்பிள்ளையை அழைத்து, ஆடி மாதம் 1ம் தேதியன்று இந்த ஆடிப்பாலை கொடுப்பது வழக்கம்.