இன்று காமராஜர் பிறந்த தினம்!

உங்கள் குறைகளை, நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான் பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநயகந்தான்.

பிறர் உழைப்பைத் தன் சுயலத்துக்குப் பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.

சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவோ ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.

ஒரு பெண்ணிற்குக் கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்!

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை!

சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும், உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது!