போகிப் பண்டிகை: பழையன கழித்து, புதியன புகவிடும் தினம் !
மார்கழி மாதத்தின் கடைசி தினத்தன்று கொண்டாடப்படுவது போகிப்பண்டிகை எனப்படும்.
இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் தினமாக கருதப்படுகிறது.
பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் போக்கி என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி போகி என்றாகிவிட்டது.
அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிதினத்தன்று என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் தினம் போகி என்போரும் உண்டு.
வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும்.