ஆடைக்கு ஏற்ற காலணி தேர்வு மிகவும் அவசியம்!
ஒரு ஆடையை எத்தனை நேர்த்தியாக அணிந்தாலும், தவறான காலணியை தேர்வு செய்தால், அதிக விலை கொடுத்து வாங்கும் அந்த டிரெஸ்சுக்கு, மதிப்பே போய்விடும்.
அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, 'லுக்' முழுமையடைகிறதா, இல்லையா என்பதை, அணியும் செருப்பும் ஷூக்களும் சேர்ந்து தான் தீர்மானிக்கின்றன.
அலுவலகம் செல்லும்போது, பார்மல் ஷர்ட், பேன்ட்ஸ், பிளேசர் போன்றவற்றை அணியும் போது பார்மல் லெதர் ஷூஸ் அல்லது லோபர்ஸ் ஷூ போட்டால், 'புரொபெஷனல் லுக்' தானாக வந்துவிடும்.
அதுவே, விசேஷ நிகழ்வுகள் என்றால், குர்தா உடையுடன் ஜூட்டிஸ் அல்லது மெட்டல் டச் உள்ள மோசரி பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்.
பொதுவாக, கேஷுவல் பார்ட்டி, காபி டேட் போன்ற நிகழ்வுகளுக்கு ஸ்னீக்கர்ஸ், ஸ்லிப்-ஆன், ஹை-டாப் ஷூக்கள் நேர்த்தியாக பொருந்தும்.
பார்மல் டிரஸ் அல்லது சுடிதார் அணியும் பெண்கள், கிட்டன் ஹீல்ஸ் அல்லது ப்ளாட் லோபர்ஸ் அணிந்து பாருங்கள்.
பட்டு பாவாடை, லெஹங்கா போன்ற பாரம்பரிய உடைகளுக்கேற்ப மோசரி, ஹீல் சாண்டல்ஸ் அல்லது டினைர் ஜூட்டிஸ் சிறந்த தேர்வு.
அதுவே, பார்ட்டி, வீக்கெண்ட் அவுட் சென்றால் ஸ்நீக்கர்ஸ், பிளாக் ஹீல்ஸ் அல்லது ஸ்டைலிஷ் பிளாட் சாண்டல்ஸ் அணியலாம்.