இதய ஆரோக்கியத்தில் கவனம் தேவை

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், முதல் ஒரு மணிநேரம் 'கோல்டு' ஆக பார்க்க வேண்டும். எப்போது, சிறு சந்தேகம் இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை, பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் நோய் நமக்கு வருவதில்லை; நாம் தான் நோயை அழைக்கிறோம்.

எனவே, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உணவு முறை மாற்றம், தினசரி நடைபயிற்சி போன்றவை மேற்கொள்ள வேண்டும்.

நெஞ்சு பகுதியில் வலி, முதுகு வலி, பல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும்.

பல நேரங்களில் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் இல்லாமல் வருகின்றன. எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.