உங்கள் கனவுத்தோட்டத்தில் கிராம்பு செடி வளர்க்க இதோ டிப்ஸ்

கிராம்புகளை நேரடியாக மண்ணில் நட்டு வளர்க்க முடியாது. கிராம்பு செடியிலுள்ள பழுத்த பழங்களிலிருந்து விதைகளை தயாரிக்க வேண்டும்.

விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, விதைக்க வேண்டும். நர்சரிகளிலும் கிராம்பு விதைகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம் உகந்தது என்பதால், ஜூன் முதல் ஜூலை வரை நடவு செய்யலாம்.

போதிய இடைவெளியில் 2.5 அடி நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழி தோண்டி விதைகளை நட வேண்டும்.

கிராம்பு சாகுபடிக்கு முறையான நீர்வசதி தேவை. கோடை காலத்தில் ஈரப்பதமாக இருக்க வேண்டும் என்பதால், 3 -6 மணி நேரம் சூரியஒளி பட்டாலே போதுமானது.

இது எளிதில் பூச்சி தாக்குதல் மற்றும் நோய்க்கு உள்ளாகும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதிர்ந்த இலைகளை அவ்வப்போது அகற்றி விட வேண்டும்.

கிராம்பு செடிகள் 4 முதல் 5 ஆண்டுகளில் காய்க்கத் துவங்கும். இதன் பழங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாக வரக்கூடும்.

பூக்கள் பூக்கும் முன் கிராம்புகளை அறுவடை செய்யலாம்.