இன்று அப்துல் கலாம் நினைவு தினம் - சிந்திக்கலாம்... சீர்துாக்கலாம்... சாதிக்கலாம்!
இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இவர் 2015 ஜூலை 27ல் மறைந்தார்.
உடலால் மறைந்தாலும் இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார்.
உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்.
நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அழகைப் பற்றிக் கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
பணத்தை எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல, 'சிக்கனம்.' பணத்தை எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறோம் என்பதில்தான் சிக்கனம் இருக்கிறது.
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், புதுமையைச் சிறப்பாகச் செய்ய முடியாது. எனவே பழமையை மறக்கக்கூடாது.
நீ முன்னேறிக்கொண்டிருக்கும்போது, மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள். ஒரு வேளை நீ பின்னடைவை சந்திக்க நேர்ந்தால், யாராவது உனக்கு உதவுவார்கள்.
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதி காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.