இந்தியர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்!

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் தயாரித்துள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 77வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல், இந்தோனேசியா, மாலத்தீவுகள், மலேசியா, தாய்லாந்து உட்பட 59 நாடுகளுக்கு செல்லலாம்.

கடந்தாண்டு, 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். தற்போது, 57 நாடுகளில் இருந்து 59 நாடாக அதிகரித்துள்ளது.

தரவரிசை பட்டியலில், இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்தது.

விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளன.

டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய நாடுகள் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.