உங்களின் பணத்தை வீணடிக்கும் 5 பயனற்ற செலவுகள்

நவீன வாழ்க்கையில் ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வாழ்வியல் செலவுகள் தவிர, சமூக ஊடகத்தில் மற்றவர்களை பார்த்து செலவு செய்வதும் அதிகரித்துள்ளது.

இச்செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், சேமிப்பும், முதலீடும் பாதிக்கப்படுவதோடு கடன் வலையிலும் சிக்கலாம்.

எனவே, பணத்தை வீணடிக்கும் 5 விதமான பயனற்ற செலவுகள் இதோ...

புதிய கார்... பளபளப்பான புதிய காரை வாங்கும் ஆசை யாருக்கு தான் இருக்காது. ஆனால், விலை அதிகமான புதிய காரை வாங்குவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

கிரெடிட் கார்டு... பலவித பயன்கள் இதில் இருந்தாலும், கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகம். குறைந்தப்பட்ச தொகையை மட்டுமே செலுத்தும் தன்மை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சூதாட்டம், லாட்டரியை நம்பும் பழக்கம் இருந்தாலும் பாதகமே. இவை கடினமாக உழைக்க விடாமல், முதலீட்டில் ஆர்வம் கொள்ளாமல் இருக்கச்செய்யும். ஜாக்பாட் எதிர்பார்ப்பு வாழ்க்கையை மாற்றாது.

பெரிய வீடு அவசியம் தான். ஆனால், விலை, பராமரிப்பு போன்ற செலவுகள் அதிகரிக்கும் என்பதால் வீண் பெருமைக்காக தேவைக்கு அதிகமானதை விட பெரிய வீட்டை வாங்குவது ஏற்றதல்ல.

பல வகையான முதலீடு வாய்ப்புகள் இருப்பினும், அதிக பலனுக்கு ஆசைப்பட்டு சிக்கலானவற்றை நாடக்கூடாது; புரியாத வர்த்தகத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.