பசலைக்கீரையின் ஆரோக்கிய நன்மைகள் இவை

வைட்டமின் ஏ, சி, கே, பி6, பி9, இ, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, நார்ச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் பசலைக்கீரையில் நிறைந்துள்ளன.

இதை தவறாமல் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.

இதிலுள்ள நைட்ரேட் சத்து ஸ்ட்ரோக் அல்லது இதய நோய் தாக்கும் ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது.

மேலும், 50 வயதிற்கு மேல் வரும் மாகுலர் டி ஜெனரேஷன் குறைபாட்டால் வரும், பார்வை இழப்பை தவிர்க்க உதவுவதாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

இதிலுள்ள செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஆகியவை, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் பருப்புடன் கடைந்து சாப்பிட, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

இதிலுள்ள பிளேவனாய்டு மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் புரோஸ்டேட் கேன்சர், பெண்களின் மார்பக புற்றுநோய், குடல் மற்றும் சினைப்பை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

இதிலுள்ள அதிகப்படியான கால்சியம், வைட்டமின் கே, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை, எலும்பு தேய்மானத்தை குறைப்பதுடன் கை, கால் மூட்டுகளில் பிரச்னை வராமல் தடுக்கும்.

இக்கீரையிலுள்ள அதிகப்படியான பச்சையம், உடலிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், வாயுத்தொல்லை ஏற்படக்கூடும். வாதநோய், தைராய்டு மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளோர் இதை தவிர்க்க வேண்டும்.