அதிகரிக்கும் கல்லீரல் புற்றுநோய்... ஆய்வில் தகவல்!

உடலிலுள்ள நச்சுக்களை நீக்குதல், சீரான ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கல்லீரலின் பணி.

இந்நிலையில் உலகில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலை நீடித்தால் 2050ல் இரட்டிப்பாகும் என 'தி லான்செட்' ஆய்வு எச்சரித்துள்ளது.

ஆண்டுதோறும் 9 - 15 லட்சம் பேர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சை பெறுவதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் எண்ணிக்கையில், 60 சதவீதம் தடுக்க முடியும்.

கல்லீரல் பாதிப்புக்கு 21 சதவீதம் மது அருந்துதல் காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.