தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

தமிழகத்தில் பிறப்பு விகிதம், 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ல், 6.09 சதவீதம் குறைந்துள்ளது.

தற்போது, 150 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இது குறையாமல், அதே அளவு நீடிப்பதற்கு குழந்தை பிறப்பு விகிதம் 2.10 சதவீதமாக இருக்க வேண்டும்.

ஆனால், குழந்தை பிறப்பு விகிதம் இந்திய அளவில், 1.90 சதவீதமாகவும், தமிழகத்தில், 1.40 சதவீதமாகவும் உள்ளது.

தமிழகத்தில் 2020ல், மொத்தம், 9,24,256 பேரும்; 2021ல், 9,24,256 பேரும்; 2022ல், 9,36,361 பேரும்; 2023ல், 9,2,329 பேரும்; 2024ல் 8,47,668 பேரும் பிறந்துள்ளனர்.

கடந்த ஐந்தாண்டுகளில், கொரோனா ஊரடங்கு காரணமாக, 2022ல் மட்டும் கூடுதலாக பிறப்பு விகிதம் இருந்துள்ளது.

பொருளாதார நிலை, கல்விக் கட்டணம், மருத்துவ செலவு உள்ளிட்ட காரணங்களால், ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதால், பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அதில் இதுமட்டுமின்றி, ஆண்களை விட பெண் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைவாக உள்ளது.