ஸ்டேக் மோதிரம் மினிமலிஸ்ட் பிரேஸ்லெட்!

ஒரு காலத்தில் ஆண்கள் அணியும் நகை என்றாலே, கனமான தங்க சங்கிலிகள் மட்டுமே நினைவுக்கு வரும்.

'அதெல்லாம் அந்த காலம்; இன்று ஸ்டேக் செய்யப்பட்ட மோதிரங்கள், மினிமலிஸ்ட் பிரேஸ்லெட்டுகள்தான் எங்கள் பேவரைட்' என்று முஷ்டி முறுக்குகின்றனர் இளைஞர்கள்.

குறிப்பாக, வெள்ளி மற்றும் ஆக்ஸிடைஸ்டு மெட்டல் பினிஷ் கொண்ட பிரேஸ்லெட்டுகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இவற்றின் தனித்துவமான தோற்றம், ஒரு தனித்துவமான ஸ்டைலை விரும்புபவர்களுக்கு, மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தங்கள் தனிப்பட்ட பாணியை வெளிப்படுத்த விரும்புபவர்கள், தங்களுக்குப் பிடித்தமான கற்களுடன் கூடிய பிரேஸ்லெட்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

செமி- ப்ரீசியஸ் கற்கள் பதிக்கப்பட்ட பெர்சனலைஸ்டு பிரேஸ்லெட்டுகள் தற்போது ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

ஸ்ட்ரீட்வேர் ஆடைகளுடனோ அல்லது கோ-ஆர்ட் செட்களுடனோ ஸ்டேக் செய்யப்பட்ட மோதிரங்களை அணியும் போது, தோற்றம் ஸ்டைலாகவும், ட்ரெண்டியாகவும் இருக்கும்.