பற்களை எடுக்காமல் பற்சொத்தைக்கு சிகிச்சை செய்ய முடியுமா?
பல் எடுக்க நேருமோ என பயந்து சிறிய பல் சொத்தையை கூட கவனிக்காமல் விட்டால் பின்னாளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நவீன பல் மருத்துவ சிகிச்சைகளின் வரவால் பல் எடுக்காமல் செய்யக்கூடிய பல சிகிச்சை வழிமுறைகள் உள்ளன.
சொத்தையின் அளவைப்பொறுத்து பல் அடைப்பது அல்லது வேர் சிகிச்சை செய்து பற்களை சரிசெய்து அதன் மேல் 'செராமிக் கேப்' மாட்டினால் இயற்கை பற்கள் போலவே மாறி விடும்.
முன்பு வேர்சிகிச்சை செய்யமுடியாது என்று சொல்லப்பட்ட பல பற்களுக்கு இன்றைய நவீன சாதனங்களினால் எளிதாகவும் வலியின்றி வேர் சிகிச்சை செய்ய முடியும்.
சொத்தையினாலோ அல்லது அடிபட்டோ பற்கள் உடைந்தால் கூட வேர் சிகிச்சை செய்து பற்களை கட்ட முடியும்.
பல் ஆடினால் பல் எடுக்க வேண்டியிருக்கும் என்பதும் தவறான கருத்து. இல்லாவிட்டால் பல் ஆடி தானாக விழும் வரை பொறுத்திருப்பது. இரண்டுமே சரியான முறை அல்ல.
ஈறுகளை பலப்படுத்தி அதன் மூலம் பற்கள் ஆடாமல் இருக்கச் செய்வது, வலுவான பற்களோடு ஆடும் பற்களை இணைத்து அவற்றை பலம்பெறச் செய்யலாம்.
சொத்தை பற்கள், ஆடும் பற்கள், உடைந்த பற்கள் அனைத்திற்கும் பல் எடுக்காமல் செய்யும் நவீன சிகிச்சை முறைகள் இன்று உள்ளன.
உரிய நேரத்தில் இவற்றை செய்து கொள்வதன் மூலம் இயற்கை பற்கள் போன்ற நிலையான பற்களை பெறலாம்.