கொய்யா இலைகளை அடிக்கடி சாப்பிட!

கொய்யா பழங்களை போன்று அதன் இலைகளிலும் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொய்யா பழம், இலைகள் உகந்ததாகும். சிறிது இலைகளை சேர்த்து காய்ச்சி டீ போல் குடிக்க பசி உணர்வு கட்டுப்படும்.

இவை மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து இதயத்தைப் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்ததாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் அடிக்கடி கொய்யா இலைகளை டீயாகவோ அல்லது அப்படியே மென்றோ சாப்பிடலாம்.

கொய்யா டீ தயாரிக்க... பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஐந்தாறு கொய்யா இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு, ஒரு பங்காக வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும்.

சூடு ஆறியவுடன் அப்படியோவோ அல்லது தேன் கலந்தோ குடிக்கலாம்.