பக்கவாதம் ஏன் வருகிறது? காரணகளும் தீர்வுகளும்..
நம் உடலில் சர்க்கரை நோய் பாதிப்பு, அதிகப்படியான கொழுப்பு, புகையிலை பழக்கம், குடிப்பழக்கம் இருந்தால் பக்கவாத வரலாம்.
மேலும் அதிக உடல் பருமன், இதய வால்வு பிரச்னை, அதிக ரத்த அழுத்தத்தினால் கூட பக்கவாதம் வரக்கூடும்.
பெரும்பாலும் அதிகம் ரத்த அழுத்தத்தினாலேயே பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ரத்த அழுத்தத்தினால் மூளையில் அடைப்பு அல்லது ரத்த கசிவு ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்பட்டு கை கால் செயல்படாமல் போகிறது.
இவற்றை தடுக்க அறிகுறி தென்படுபவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த அழுத்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
டாக்டர் பரிந்துரைக்க கூடிய மாத்திரைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவு கட்டுப்பாடுடன் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பிரச்னை உள்ளவர்கள் புகை பிடிப்பது, மது பழக்கத்தை கைவிட வேண்டும்.
தினமும் காலை மாலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.