குழந்தைக்கு திட உணவை எப்போது தரலாம்?

பொதுவாக 4 முதல் 6 மாதங்களுக்கு இடையில் திட உணவை அறிமுகப்படுத்த குழந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளை கவனிக்க வேண்டியது அவசியம்.

உங்கள் குழந்தை தனது தலையை நிலையாகப் பிடித்துக் கொண்டு, குறைந்த ஆதரவுடன் நிமிர்ந்து உட்கார வேண்டும். இது அவர்களின் தசைகள் சரியாக வளர்வதைக் குறிக்கிறது.

4 முதல் 6 மாதங்களில், குழந்தைகள் உள்ளுணர்வாக தங்கள் நாக்கின் மூலம் தேவையற்ற பொருட்களை வாயில் இருந்து வெளியே தள்ளும் அனிச்சையை இழக்கத் தொடங்கும்.

ஒரு ஸ்பூன் கொடுக்கும்போது வாயைத் திறந்தால், குழந்தை உணவு உண்ணும் தயார் நிலையில் இருப்பதை அறியலாம்.

தாய்ப்பால் அல்லது பார்முலா முழுமையாக உண்ட பிறகும் குழந்தை தொடர்ந்து பசியுடன் இருப்பதாகத் தோன்றினால், திட உணவுகளை அறிமுகப்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும்.

அதேப்போல் முதல் உணவை தேர்வு செய்வதில் கவனம் தேவை. அரிசி சோறு, கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவை சிறந்த அறிமுக உணவுகள்.

ஓட்ஸ் அல்லது பார்லி தானியங்கள், மசித்த வாழைப்பழம், அவகேடோ பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

சிறிதளவு உணவு தரும் போது குழந்தை எப்படி பிரதிபலிக்கிறது என கவனியுங்கள். திட உணவுகளுடன் வழக்கமான பால் அல்லது பார்முலா உணவுகளையும் தரவும்.

குழந்தை சாப்பிடும் போது எப்போதும் கண்காணித்து, சரியாக உட்கார்ந்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.