அதிகரிக்கும் டீன் ஏஜ் கர்ப்பம்... ஹை ரிஸ்க் பிரசவம் என மறக்காதீர்கள் !

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், இளம் வயதில் கர்ப்பம் அடைவது அதிகரித்துள்ளது.

20 வயதுக்குள் பெண் பிள்ளை கருவுருவது என்பது, உலகளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக, உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

இது, பெண்களின் உடல், மனம் மற்றும் சமூக நலன், அவர்களின் கல்வி, பொருளாதார எதிர்காலத்தையும் பாதிக்கின்றது.

பாலியல், இனப்பெருக்கம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இளம் வயதில் கர்ப்பமடைவது தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மகப்பேறு கால குழந்தை, தாய் இறப்பில் இளம் வயது கர்ப்பம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

18 வயதுக்கு கீழே குழந்தைப் பேறு உண்டாகும் போது, ரத்தசோகை, பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படலாம், கர்ப்பப்பை போதுமான வளர்ச்சி இருக்காது.

சிலருக்கு திடீர் ரத்தஅழுத்தம் அதிகரிக்கும் அபாயமுள்ளது. ரத்தசோகை அதிகமாக இருந்தால், குறைப்பிரசவத்திற்கும், குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு அதிகம்.

எனவே, இளம் வயது கர்ப்பத்தை எப்போதும் ' ஹை ரிஸ்க் ' பட்டியலில் டாக்டர்கள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டீன் ஏஜ் கர்ப்பம் என்பது முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒன்று என்பதால், பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.