ரயில் பயணத்தில் 45 காசு காப்பீடு பயன் தருமா?

ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, 45 பைசா பிரீமியம் பிடித்துக் கொள்ளலாமா? என கேட்கப்படும்.

இது, 'ஆப்ஷனல் பயண காப்பீடு திட்டமாகும். ஆம் என பதிலளித்தால், உங்கள் டிக்கெட் கட்டணத்தோடு இந்த தொகையும் பிடித்தம் செய்யப்படும்.

பாலிசி விபரங்கள் இ - மெயில், குறுஞ்செய்தியாக வரக்கூடும். அதில் வழங்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி, நாமினி குறித்த விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்தக் காப்பீடு, அந்த ஒரு பயணத்துக்கு மட்டுமே பொருந்தும்; பயணத்தை ரத்து செய்தால் பிரீமியம் திரும்ப வழங்கப்படாது.

ரயில் பயணத்தின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம், நிரந்தர முழுமையான ஊனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

நிரந்தர பகுதியளவு ஊனத்துக்கு ரூ.7.5 லட்சம், மருத்துவமனை செலவுக்கு ரூ.2 லட்சம், சடலத்தை எடுத்துச் செல்லும் செலவுக்கு ரூ. 10,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தக் காப்பீட்டின் கீழ், 333 கோரிக்கைகளுக்கு ரூ.27.22 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

45 பைசா செலவில் இவ்வளவு பெரிய காப்பீடு பாதுகாப்பு கிடைப்பது வரவேற்கத்தக்கதாகும்.