இன்று நாட்டின் 79-வது சுதந்திர தினம்

நாட்டின் விடுதலை போராட்டத்தில் முக்கிய நிகழ்வுகள் சில பார்போம்... 1600- டிச., 31: பிரிட்டீஷ் கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி துவக்கம்.

1857: முதல் இந்திய விடுதலை போர் (சிப்பாய் கலகம்) வெடித்தது.

1858 : கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி ஆட்சி முடிவு. பிரிட்டீஷ் அரசியின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது.

1906: ஆங்கிலேயரின் கப்பல் வணிகத்துக்கு எதிராக தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் சுதேச நீராவி கப்பல் நிறுவனத்தைதொடங்கினார்.

1915 : தென் ஆப்ரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பினார். அகிம்சை முறையில் சுதந்திர போராட்டத்தை நடத்தினார்.

1928, டிச.,17 போலீஸ் அதிகாரி சாண்டர்சை பகத்சிங் சுட்டு கொன்றார்.

1932- ஜன. 11: ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார் திருப்பூர் குமரன். இவர் மீது தடியடி நடத்திய போது கையில் தேசிய கொடியுடன் உயிர் தியாகம் செய்தார்.

1942., ஆக.8: வெள்ளையனே வெளியேறு போராட்டம் துவக்கம்.

1947 ஜூன் 31 இந்தியா -பாக்., பிரிவினை அறிவிப்பு

1947 ஆக.15: இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றது.