டீப் வெயின் த்ரோம்போசிஸ் ஒரு சொல்ல முடியாத வலி!

ஹார்மோன் மாற்றங்கள், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவற்றால், 'டீப் வெயின் த்ரோம்போசிஸ்' என்ற 'டிவிடி' ரத்த நாளங்களில், தீவிர ரத்த உறைதல் ஏற்படும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, பயணம் செய்வது, அல்லது படுக்கையில் ஓய்வெடுப்பது போன்ற காரணங்களால் ரத்த ஓட்டம் குறையும் போது, டிவிடி ஏற்படலாம்.

ரத்தம் உறையும் தன்மை இயல்பை விட அதிகமாக இருப்பவர்களுக்கு இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சிறிது துாரம் நடந்ததும் கெண்டைக்காலில் வலி ஏற்படுவது முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டறிந்தால், எளிய மருந்துகளே நோய் தீவிரமடைவதை தடுக்க உதவும்.

ஆண்களை விட இது பெண்களிடம் குறைவாக காணப்பட்டாலும், இந்த குருதிநாள அழற்சிகள் வேகமாக வளரும் தன்மையையும், வெடிக்கும் அதிக அபாயத்தையும் கொண்டுள்ளன.

எனவே, ஆரம்பத்திலேயே இப்பாதிப்பிற்கு உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்க்கவும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எழுந்து நடக்க முயற்சிக்கவும். உடல் எடையை சீராக வைத்திருக்கவும்

பாதுகாப்பான, சரியான காலணிகளை அணிவது, நீர்ச்சத்து குறையாமல் உடலை வைத்திருப்பது, நோயின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது போன்றவை அவசியம்.