ஆரோக்கியமாக வாழ வேண்டுமா.. முதலில் பண்ண வேண்டியது டீடாக்ஸ்!

உடலில் கழிவுகளின் தேக்கமே, நோய்களுக்கான வழித்தடமாக மாறும். சரியான முறையில் 'டீடாக்ஸ்' அதாவது, கழிவு நீக்கம் செய்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கலாம்.

பொதுவாக இரவு நேரத்தில் தான், நம் உடல் அனைத்து உறுப்புகளும் இயல்பாகவே டீடாக்ஸ் வேலைகளை துவங்கும்.

எனவே உடல் டீடாக்ஸ் ஆவதற்கு சரியான உணவு முறை, உடற்பயிற்சி, துாக்கம் கட்டாயம். குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

குழந்தைகளை சரியான நேரத்திற்கு காலையில் எழுப்பவேண்டியதும், உறங்க வைப்பதும், காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக டாய்லெட் செல்ல பழக்க வேண்டியதும் அவசியம்.

உணவு முறை சரியாக இருக்க வேண்டும். காய்கறி, பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட அனைத்தும் சரியான விகிதத்தில் கட்டாயம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் அனைத்து காய்கறியும் உண்ண பழக்க வேண்டும். மைதா, துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொண்டால், கழிவு வெளியேறுவதில் சிரமங்கள் இருக்கும்.

பொதுவாக, வெள்ளை பூசணி, சுரக்காய் ஜூஸ், கொத்துமல்லி அல்லது சுக்கு காபி, போன்றவற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

உடலில், வெப்பம், குளுமை என்ற இரண்டு தன்மைகள் உள்ளன. யாருக்கு என்ன குறைபாடு உள்ளது, என்ன தேவை என்பதை மருத்துவர்களை அணுகி தெரிந்து, பின்னர் பயன்படுத்தலாம்.