ரத்த சோகை கர்ப்பிணிகள் உடலை எப்படி பராமரிப்பது?
ரத்த சோகை ஒரு பொது வகை நோய். கர்ப்ப காலத்தில் இவை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.
தற்போது உள்ள சூழலில் 100 பெண்களில் குறைந்தது 90 பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுகிறார்கள்.
காரணம் தற்போது பெண்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது. சத்தான உணவுகளை, காய்கறி தவிர்ப்பதால் ரத்த சோகை உருவாகிறது.
பொதுவாக பெண்கள் இரும்புச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பீட்ரூட், முருங்கை கீரை, அத்திப்பழம், பேரிச்சம்பழம், மாதுளை உள்ளிட்டவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உடலில் ஹீமோகுளோபின் சரியாக பராமரிக்க வேண்டும்.
பிரச்னை உள்ளவர்கள் முறையான கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற்று பரிந்துரைக்கக்கூடிய இரும்புச்சத்து மாத்திரைகளை சரியான இடைவெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும்.