இறந்தவர்களின் 'ஆதார், பான்' கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டுமா?

இறந்தவர்களின் 'ஆதார், பான்' கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை.

ஆனால், நம்முடைய பாதுகாப்புக்காக இ-சேவை மையங்களில் போய் இறந்தவருடைய மரண சான்றிதழைக் காண்பித்து, அவரது ஆதாரை செயலற்றதாக்குவது நல்லது.

பான் விஷயத்தில், எந்த அலுவலகத்தில் இருந்து பான் எண் கொடுக்கப்பட்டதோ, அந்த அலுவலருக்குக் கடிதம் எழுதி, பான் அட்டையின் பிரதியை வைத்து, கொடுப்பது அவசியம்.

இறந்தவருடைய பான், ஆதாரை வைத்துக்கொண்டு, பல்வேறு முறையற்ற பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகளை செய்வதற்கு வாய்ப்புள்ளது.

எனவே தான், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மற்றபடி, பான், ஆதார் எண்கள் நீக்கப்படாது.

மரணம் அடைந்துவிட்டால், அவை செயலற்றதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.