பரவும் காய்ச்சலில் 70 சதவீதத்துக்கு மேல் இன்ப்ளூயன்ஸா பாதிப்பு
தமிழகத்தில், ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
காலநிலை மாற்றம், மழை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பாதிப்புகளால், மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
தற்போது, மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் காய்ச்சலில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில், 70 சதவீதம் பேருக்கு, 'இன்ப்ளூயன்ஸா' வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர, டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலாலும், வேறு வகை சாதாரண காய்ச்சலாலும், மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்ப்ளூயன்ஸா வகை காய்ச்சலாக இருந்தாலும், சுயமாக மருந்து கடைகளில், மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே, மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை மக்கள் அச்சப்படும் வகையில், காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.