இன்று தேசிய பொறியாளர்கள் தினம்!

இந்தியாவில் பொறியாளர்கள் தினம் செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான இன்று பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நவீன இந்தியாவின் வளத்தை பெருக்கியதில், அணைக்கட்டுகளின் பங்கு முக்கியமானது, அதில் பெரும் பங்கு வகித்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா

1955 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது பெற்றார். 1962 ஆம் ஆண்டு தனது 101வது வயதில் இறந்தார்.

பொறியாளர்கள் தினம் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பொறியாளர்களின் சாதனைகளை, பங்களிப்புகளைக் கொண்டாடும் நாளாகும்.

ஒவ்வொரு நாட்டிலும் பொறியியல் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள், “ஆழமான தொழில்நுட்பம் & பொறியியல் சிறப்பு: இந்தியாவின் தொழில்நுட்பப் பயணத்தை இயக்குதல் ” ஆகும்.