சமூக வலைத்தளங்களால் தனிமையை தவிர்த்தால்.. வளருமே நேர்மறை சிந்தனை!
இன்றைய நாகரிக உலகில் இளம் பருவத்தினரிடம் ஏராளமான திறமைகள் இருப்பினும், மற்றவர்களிடமான இணைப்பு சரிவர இருப்பதில்லை.
ஒவ்வொருவரும் தனித்தீவில் இருப்பது போல வாழ்கின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களால் தனிமைப்பட்டு உள்ளனர்.
பிறருடன் இணைந்து விளையாடுவது, பிறருடன் ஒன்றாக இருப்பது, பிறரின் மனநிலையை புரிந்து கொள்ளுதல், அதன்படி நடத்தல் போன்ற பண்புகளை இழக்கின்றனர்.
சக மனிதர்களுக்கு இடையே தொடர்பு மேம்படுவதுடன், ஸ்மார்ட் போன் பயன்பாடு குறைய வேண்டும். தனிமையில் இருப்பதாலேயே எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன.
போதைப்பொருள் பயன்பாடும் இப்போது வளர்ந்து வருகிறது. அவை, மாணவர்களின் சிந்தனை முறையை மாற்றிவிடுகின்றன; அறிவுத்திறனை குறைக்கின்றன.
எனவே, வளர்ச்சிக்கு தடை போடும் போதைப்பொருள் மற்றும் சமூக வலைதளங்கள் பார்ப்பதை குறைக்க வேண்டும்.
குடும்பத்தினரிடமும். சக மனிதர்களிடமும் நேரம் செலவிட முன்வர வேண்டும். அப்படி செய்தால் நேர்மறை சிந்தனை நன்றாக வளரும்.
நேர்மறையாக சிந்திப்பதால் மன அழுத்தம் குறைந்து, இதய நோய் பாதிப்பை தவிர்க்கலாம் என ஆய்வாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.