மூலிகை துவையல் ட்ரை பண்ணலாமா?
தேவையானப் பொருட்கள்: நறுக்கிய பிரண்டை - 1 கப், பெருங்காயம், மிளகு, காய்ந்த மிளகாய் - சிறிதளவு.
கறிவேப்பிலை - 1 கப், உப்பு, நல்லெண்ணெய், தண்ணீர் - தேவயைான அளவு.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், கறிவேப்பிலை, பிரண்டை, பெருங்காயம், மிளகு, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
சூடு ஆறிய பின், தேவையானளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இப்போது, ஆரோக்கியமான மற்றும் சுவையான மூலிகை துவையல் ரெடி.
சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.