கல்லீரல் கொழுப்பு நோயை கட்டுப்படுத்தும் கருப்பு கவுனி அரிசி

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தக்கூடிய, மார்பக புற்றுநோய் பாதிப்பை குறைக்கக் கூடிய பண்புகள் கருப்பு கவுனி அரிசியில் நிறைந்துள்ளன.

நாள்பட்ட தோல் அழற்சியால் அவதிப்படுபவர்கள் கருப்பு கவுனி அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளும் போது, நாளடைவில் பாதிப்பின் தன்மை குறைய வாய்ப்புள்ளது.

இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட், உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைப்பதோடு, எடையும் குறைக்க உதவுகிறது.

தொடர்ந்து சாப்பிட கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி, கல்லீரல் கொழுப்பு நோய் கட்டுப்படுத்துகிறது.

கருப்பு கவுனி அரிசியை உணவாக எடுத்துக்கொண்டால், மூச்சுக்குழாயில் உள்ள நீர்க்கோவை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து ஆஸ்துமா வராமல் தவிர்க்கிறது.