ரத்த சிவப்பில் ஓர் ஏரி; அதன் தண்ணீரைக் குடித்தால் கல்லாய் மாறும் அபாயம்..!

ஆப்பிரிக்க கண்டத்தில் தான்சானியா பகுதியின் நகராகோரோ மாகாணத்தில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி. இந்த ஏரி பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது..!

இதனருகில் உள்ள எரிமலையிலிருந்து வெளியேறும் சோடியம் கார்பனேட் மற்றும் பிற தாதுக்களால் அல்கலைன் அதிகரித்து ஏரி சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இந்த ஏரியின் தண்ணீரைக் குடிக்கும் விலங்குகள் இறப்பது மட்டுமின்றி, பல ஆண்டுகள் பதப்படுத்தியது போன்று அவற்றின் உடல் இறுகி விடுகிறது. எனவே இந்த இறுகிய உடல், சிலைபோலக் காட்சியளிக்கிறது.

சரி..! மனிதர்களும் இந்த ஏரித் தண்ணீரைக் குடித்தால் விலங்குகளைப் போல மரணம் அடைந்து, உறைந்து போவார்களா? என்றால் ஆம் என்பதே நமக்குக் கிடைக்கும் அதிர்ச்சிகரமான பதில்..!

ஃபிளமிங்கோ பறவை, ஈர நிலப் பறவைகள் சில இந்த ஏரி நீரைக் குடித்தால் அவற்றுக்கு உடல் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை.

ஃபிளமிங்கோ பறவையின் தோல் மற்றும் அதன் மூக்கில் உள்ள சுரப்பிகள் இந்த ஏரித் தண்ணீரின் பாதிப்பில் இருந்து அவற்றைப் பாதுகாக்கிறது.