என்னது! வெளிநாடு சுற்றுலாத் தலங்களை இந்தியாவிலே பார்க்கலாமா?

அச்சு அசலாக வெளிநாடு சற்றுலா தலங்கள் போல் இந்தியாவில் உள்ள இடங்களை பற்றி பார்ப்போம்.

சிக்கிமில் உள்ள குருடோங்மார் ஏரி ஐஸ்லாந்தில் உள்ள அழகிய ஏரிகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நீங்கள் எப்போதாவது பிரெஞ்சு பாலினேசியாவிக்கு செல்ல வேண்டும் என்று கனவுக் கண்டிருந்தால், அதிக செலவு இல்லாமல் லட்சத்தீவுக்கு செல்லாம்.

நெதர்லாந்தின் துலிப் கார்டன் உலக அளவில் மிகவும் பிரபலமானது. ஆனால், இந்த துலிப் கார்டன் இந்தியாவிலும் உள்ளது. ஆம் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி துலிப் கார்டன், துலிப் மலர்களால் பூத்துக் குலுங்கி நம்மை வரவேற்கிறது.

பாங்காக் மிதக்கும் மார்க்கெட்டிற்கு செல்ல திட்டமிட்டால் காஷ்மீருக்கு சென்று வாருங்கள், தண்ணீரில் ஷிகாரா சவாரி, மிதக்கும் சந்தை என பாங்காங் சென்ற அனுபவத்தை தருகிறது.

ஆலப்புழாவின் உப்பங்கழிகளில் சவாரி செய்வது உங்களை வெனிஸ் போலவே உணரவைக்கும். ஆகவே வெனிஸின் உணர்வைப் பெற இங்கு சென்று வரலாம்.

உலக அளவில் பிரபலமான நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகைப் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. நயாகரா நீர்வீழ்ச்சி போலத்தான் சத்தீஸ்கரின் சித்ரகூட் நீர்வீழ்ச்சி சீசன் நேரங்களில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

உத்தரகாண்ட்டில் உள்ள தேசிய பூங்கா பூக்கள் பள்ளத்தாக்கின் அழகை பார்ப்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஆன்டெலோப் பள்ளத்தாக்கை போலவே உள்ளது.