இந்தியாவின் பிரபலமான மாஸான புடவைகள்
உத்திர பிரதேசத்தின் வாரணாசியில் தயாரிக்கப்படும் பிரபலமான பனாரசி புடவை, தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை எம்பிராய்டரிக்கு பெயர் பெற்றது. திருமண விழாக்களில் பலரின் சாய்ஸ் ஆக உள்ளது.
ம.பி.,யின் சந்தேரி புடவைகள் மாடர்ன் தோற்றத்துடனும் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் நேர்த்தியாக வடிவமைக்கப்படுகின்றன. இதன் முக்கிய அம்சம் தங்கம் மற்றும் வெள்ளியின் பிரதிபலிப்பாகும்.
இந்தியாவில் பரவலாக அனைவராலும் விரும்பப்படும் புடவைகளில் ஒன்று தமிழகத்தின் காஞ்சிவரம் பட்டுப்புடவை. நேர்த்தி, அழகு மற்றும் டெம்பிள் டிசைன் கலெக்ஷன்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
ராஜஸ்தானின் லெஹேரியா புடவைகள் சாயமிட்ட பிறகு, 'கெலிடோஸ்கோபிக்' போன்ற அலை அலையான வடிவத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
குஜராத்தைச் சேர்ந்த பந்தனி புடவைகள் கம்பீரமான அழகுடன் வடிவமைப்படுகின்றன. இதன் அழகு, கலரிங் காரணமாக இந்தியா முழுவதுமே, பண்டிகை, திருமண வைபவங்களுக்கு அதிகளவில் விற்பனையாகிறது.
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் சம்பல்புரி இகாட் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கைத்தறி புடவைகள் சாதாரண இகாட் நெசவுடன் உருவாக்கப்பட்ட புதுமையான வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றன.
லக்னோவிலிருந்து வரும் ஊசி வேலைகளின் பழங்கால வடிவம் சிக்கன்காரி புடவைகள். தூய்மையான நேர்த்தி, அழகிய எம்பிராய்டரி வேலைப்பாடு காரணமாக பலராலும் அதிகளவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
தெலுங்கானாவின் போச்சம்பள்ளி புடவைகள் பட்டு மற்றும் பருத்தி துணிகளின் ஒருங்கிணைந்த கலவைகளுக்கு சிறந்த உதாரணமாகும். உடுத்தும்போது வசீகரமான, அழகிய தோற்றத்தை அளிக்கின்றன.