குஜராத்தில் 31 லட்ச ருத்ராட்சத்தில் சிவன் சிலை... சிவராத்திரி விழா கோலாகலம் !
நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் இன்று (பிப்.,18) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு இன்று மாலை நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, வழக்கத்தை விட அதிகமானோர் வந்துள்ளனர். அக்கினி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
31 லட்ச ருத்ராட்சத்தில் சிவன் சிலை... குஜராத் மாநிலம் தரம்பூரில் சுமார் 31 லட்ச ருத்ராட்சங்களை பயன்படுத்தி சிவன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையானது 31.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ருத்ராட்ச சிவலிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மகாதேவ் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.