எடையை குறைக்க.. வெங்காயம் போதும்...!

நமது உடல் எடையை குறைக்க, வாயில் நுழையாத பெயர்களை கொண்ட பலவற்றை வாங்கிச் சாப்பிடுவோம்.

நாம் அறியாமலேயே, ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் சில பொருட்கள் நம் எடையை குறைப்பதில் சிறப்பாக செயல்படுவது உண்டு.

அவற்றை சரியான முறையில் சாப்பிட்டால் போதும் எடையை எளிதில் குறைக்கலாம். அப்படி ஒரு பொருள் தான் வெங்காயம். கிச்சனின் இது இல்லாமல் சமையல் இல்லை என்றே சொல்லலாம்.

உடல் எடையை குறைக்க சாறு, சூப், சாலட் என பலவழிகளில் வெங்காயத்தை சாப்பிடலாம்.

வெங்காயச் சாறு... ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் சாறை வடிக்கட்டியோ இல்லை அப்படியோ குடிக்கலாம்.

ஒரு கடாயில் இரண்டு நறுக்கிய வெங்காயம், ஒரு இன்ச் இஞ்சியை நன்கு வதக்கவும். காய்கறி அல்லது சிக்கன் சிறிது சேர்க்கலாம். அவை வெந்தவுடன் தண்ணீர், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்தால் வெங்காய சூப் ரெடி.

எந்த வேளை, உணவு எடுத்து கொண்டாலும் ஒரு வெங்காயத்தை விரும்பிய வண்ணம் வெட்டி அதில், சிறிது எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து சாலட் போல் செய்து உண்ணலாம்.

உடலில் உள்ள கெட்டியான கொழுப்பை கூட வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து அகற்ற உதவுகிறது.

இது மட்டுமில்லாமல் இதில் கால்சியம், இரும்பு, போலிக் ஆசிட், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன.