கண்களைக் கவரும் பஞ்சவர்ண நதி!

தென் அமெரிக்க கண்டத்தின் கொலம்பியாவில் கானோ கிறிஸ்டல்ஸ் என அழைக்கப்படும் ஐந்து நிறங்களுடைய நதி அமைந்துள்ளது.

மஞ்சள், பச்சை, சிவப்பு, கருப்பு மற்றும் நீல நிறங்கள் இதில் அடங்கியிருப்பதால், இது ஐந்து வண்ண நதி என்றும், திரவ வானவில் என்றும் அழைக்கப்படுகிறது.

அழகான ஓவியம் போலிருக்கும் இந்த நதி, உலகின் மிக அழகான நதியாக கருதப்படுகிறது. இந்த திரவ வானவில் நதியின் அழகு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காணப்படுகிறது.

ஆற்றில் உள்ள ஒரு சிறப்புத் தாவரமான மக்கரேனா கிளாவிகெரா (Macarena clavigera) காரணமாகத்தான் இந்த ஆற்று தண்ணீரின் நிறம் மாறத் தொடங்குகிறது. இந்தச் செடியால்தான் நதி முழுவதும் இயற்கையாகவே வண்ணமயமானதாகத் தெரிகிறது.