டிராகன் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா....!
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் சிறந்த தேர்வு. இது கலோரிகள் இல்லாத பழம். இதன் விதைகள் பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ உங்கள் அழகையும், சருமத்தையும் பாதுகாக்கிறது.
இரும்புச்சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது. அதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிக்கிறது.
டிராகன் பழம் நார்ச்சத்து நிறைந்த பழம். மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு டிராகன் பழம் கைக்கொடுக்கும்.
புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றலும் இதில் உள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க இனி டிராகன் பழத்தையும் நீங்கள் விரும்பி உண்ணும் பழங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.