குழந்தையிலேயே பருவம் எய்துவதற்கான காரணங்கள்.

இன்றைய நவீன காலகட்டத்தில் உணவிலிருந்து இணையதளம் வரை அனைத்தும் வேகமாக வளர்ந்து வருகிறது.

மாற்றத்தை விரும்பும் மக்கள் துரிதமான உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள தொடங்கினர்.

அடுத்த சந்ததியரான குழந்தைகளுக்கும் துரித உணவுகளை அளவுக்கு அதிகமாகவே கொடுத்து பழக்கப்படுத்திவிட்டனர்.

பருவமடைதல் என்பது பெண்களில் எட்டு வயது முதல் 13 வயது வரையிலும், ஆண்களில் ஒன்பது வயது முதல் 14 வயது வரையிலும் ஏற்படக்கூடியது.

தற்பொழுது இரு பாலினத்தை சேர்ந்த குழந்தைகளும் குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே பருவமடைவதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதனை “பிரிக்கோஷியஸ் பருவமடைதல்” என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிக எடையுடன் இருப்பதால் உடலில் ஈஸ்ட்ரோஜன், இன்சுலின் போன்ற சுரபிகள் முன்னரே சுரந்து பருவமடைதலை விரைவாக ஏற்பட செய்கிறது.

புரதச்சத்து அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் புரோட்டின் ஷேக்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குகின்றனர்.

இது எதிர்மறையான விளைவுகளை குழந்தைகளிடையே ஏற்படுத்துகிறது.