இந்தியாவின் புகழ்பெற்ற அழகிய கடற்கரைகள்!

இந்தியாவில் வடக்கே இமையமலை நம்மை காப்பது போல், தெற்கு பகுதியை சுற்றி இருக்கும் அழகிய கடல்களும் ஒரு இயற்கை பாதுகாப்பே.

பொழுதை போக்க, பெரிய பொருட்செலவு தராததால் கடற்கரைக்கு செல்ல மக்கள் அலை மோதுவர். ஆனால் தனிமையில் கடற்கரையை ரசிப்பது மனதுக்கு மிகுந்த அமைதியை தரக்கூடும்.

இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற அழகிய மற்றும் சற்று தனிமை நிறைந்த கடற்கரைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

கர்நாடகாவில் உள்ள ஓம் கடற்கரையானது ஹிந்தியிலுள்ள ஆன்மீக ஒலியான ஓம் வடிவத்தை போன்று காட்சியளிப்பது நம்மை பிரமிக்க வைக்கிறது.

கோவாவில் உள்ள பட்டாம்பூச்சி கடற்கரையில் பெயருக்கேற்ப பல வண்ணமயமான, அழகிய பட்டாம்பூச்சிகள் காணப்படுகிறது. தேனிலவு தம்பதிகள் இங்கு அதிகம் வருவதால், இதற்கு 'ஹனிமூன் பீச்' என்ற பெயர் உண்டு.

ஒடிசா, அஸ்தரங்க கடற்கரையில் பறவைகள் அதிகளவில் காணப்படுவதால், புகைப்பட கலைஞர்கள இங்கு படை எடுப்பார்கள்.

கேரளாவின் அழகிய பேக் வாட்டர்ஸில் அமைந்திருக்கும் பகுதியில் மராரி கடற்கரை ஒன்றாகும். கூட்டம் எதுவுமின்றி அமைதியான சூழலில் ஓய்வெடுக்க நினைபவர்கள் இங்கு செல்லலாம்.

சூரிய ஒளியில் புதுச்சேரி, செரினிட்டி கடற்கரை மணல் தங்க மணல் போல் காட்சியளிக்கும். மரங்கள் சுற்றியிருக்க வெள்ளை மணலுடன், கடலை அருகே பார்க்க கற்பாலம் என காண்போரை கவர்கிறது.

மேற்கு வங்கம், மந்தர்மணி, கடற்கரையில் படுத்துக் கொண்டே அலைகளின் சப்தத்துக்கு இடையே, மறையும் சூரியனை பார்க்கும் காட்சி, மயக்கும் மாலை பொழுதாக அமையும் என்பதில் அய்யமில்லை.