தினமும் 3 மாதுளை - வலுப்பெறும் இதயம்

மாதுளம் பழங்களைத் தவிர்த்து உணவில் அதிக நார்ச்சத்து, பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கும் போது இதயம் ஆரோக்கியமாகும்.

உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்ப்பது அவசியமாகும். அதே சமயம் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் காணப்படும் மாறுபக்க கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்ப்பது முக்கியம்.

இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க, மது அருந்துவது மற்றும் புகைபிடிப்பதை கைவிட வேண்டும்.

மாதுளம் பழங்கள் தமனிகளைச் சுத்தப்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த நாளங்களில் அடைப்பைத் தடுக்கவும் உதவுகிறது.

மாதுளம் பழங்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சக்திவாய்ந்த ஆத்தரோஜெனிக் முகவர் போல் செயல்படும்.