நீங்க போக நினைச்ச இடத்துக்கு.. இதோ அழகிய ஆல்டர்னேட் இருக்கே...!
ஒரே இடத்துக்கு சென்று சலிப்பு தட்டி விட்டதா? அதேப்போல, அழகான ஆனால்.. வேறொரு இடத்துக்கு செல்ல நினைக்கிறீர்களா? அதுவும் பட்ஜெட்டுக்குள். அப்படியென்றால் இது உங்களுக்குத்தான்.
சோழர்களின் கட்டடக்கலை அதிசயங்களின் தாயகம் தஞ்சாவூராகும். ஹம்பிக்கு மாற்றாக தஞ்சை பெரியகோவில் உள்ளது. கோவில்கள், அரண்மனைகளை சுற்றிப் பார்த்து, பழங்காலத்துக்கே மனதளவில் செல்லலாம்.
சிறந்த கடற்கரை இடங்களில் ஒன்றான கோவா இளசுகள் பலரின் சாய்ஸாகும். ஆனால், கூட்ட நெரிசல், பட்ஜெட் செலவை தவிர்க்க பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கோகர்ணாவைத் தேர்ந்தெடுக்கலாம்.
கம்பீரமான இமயமலை, பனிபடர்ந்த மலை சிகரங்கள், அழகிய மடங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட சிக்கிம், லடாக் சென்ற அதே உணர்வை அளிக்கிறது. அழகிய இயற்கை காட்சிகளில் ஒரு கணம் மெய் மறப்பீர்கள்.
அழகிய நைனிடாலுக்கு மாற்றாக சுற்றிலும் பனி படர்ந்த மலைகள், பசுமையான காடுகள், அழகிய ஏரிகள் என இயற்கை அழகை தாராளமாக விரித்து வரவேற்கிறது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்.
ஹிமாச்சல பிரதேசத்தின் ஜோகிந்தர் நகர் பள்ளத்தாக்கின் மேற்கில் அமைந்துள்ள சிறிய கிராமமான பிர் பில்லிங், பாரா கிளைடிங் செய்ய பிரபலமான இடமாக மாறி வருகிறது; மணாலிக்கு பதிலாக செல்லலாம்.