பொன்னியின் செல்வனில் குந்தவையாக திரிஷாவுக்கு பதிலாக அசின்...!

அய்யடா... என்ற டயலாக் மூலமாக எம்.குமரன் s/o மகாலட்சுமி திரைப்படத்தில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் அசின்.

தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

திருமணத்துக்குப் பின் படங்களில் நடிக்காமல் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது தன் குழந்தையின் போட்டோ, வீடியோக்களை சமூகவலைத்தளங்களிலும் பதிவிடுகிறார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யா ராய், திரிஷா கதாபாத்திரங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், குந்தவை கதாப்பாத்திரத்தில் திரிஷாவுக்கு பதிலாக அசினின் முகத்தை மாற்றி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக ஜோதிகாவை மாற்றியுள்ளனர்.

எனவே அசினின் இந்த வைரல் போட்டோவுக்கு லைக்குகள் அள்ளி வீசுவது மட்டுமின்றி, மீண்டும் 'ரீஎன்ட்ரி' தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர் ரசிகர்கள்.