வெயிலுக்கேற்ற வெள்ளரி!
மார்பகம், கருப்பை, சினைப்பை மற்றும் ப்ராஸ்டேட் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் திறன் கொண்ட பாலிஃபீனால் சத்துக்கள் இதிலுள்ளன.
இதிலுள்ள ஃபிசெடின் என்ற அழற்சி தடுப்பு ரசாயனம், நினைவாற்றலை மேம்படுத்துகிறது. மேலும் வயதாவதால் நரம்பு செல்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது. அல்சீமர் நோய் பாதிப்பையும் குறைக்கிறது.
நமக்கு நன்கு தெரிந்த வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் முதல் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் வெள்ளிரியில் உள்ளன. இவை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைத்து ஆயுளை அதிகரிக்கின்றன.
95% வரை நீர்ச்சத்து இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் சூட்டை குறைக்கிறது.
மக்னீசியம், பொட்டாசியம், சிலிக்கான் போன்ற சருமத்துக்கு தேவையான தாதுக்கள் இதில் நிறைந்துள்ளது. அதனால் தான் இது ஸ்பாக்களில் பயன்படுத்தப்படுகிறது. சரும புண்கள் மீது வெள்ளரியை தடவினால் குணப்படுத்த உதவும்.
இன்சுலின் சுரப்பதற்கு அவசியமான ஒரு ஹார்மோன் வெள்ளரியில் இருக்கிறது. மேலும் கொழுப்பு சேர்வைதை தடுத்தல், எடையை பராமரித்தல் என பல வழிகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.
கண்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையங்கள், வீக்கம், சுருக்கம் இவற்றை போக்க வெள்ளரி உதவுகிறது.
இதில் வைட்டமின் பி1, பி5, பி7 உள்ளிட்ட பல்வேறு பி வைட்டமின்கள் உள்ளன. இவை பதற்றத்தை தணிக்கும் குணத்துடன், மன அழுத்தத்தால் உடலுக்கு ஏற்படும் சில கெடுதலான பக்கவிளைவுகளையும் குறைக்கின்றன.