ஏன் பின்னோக்கி நடக்க வேண்டும்...?

பின்னோக்கி நடங்க...' என யாராவது கூறினாலே 'என்னடா இது?' என பலருக்கும் வேடிக்கையாகத் தான் நினைக்கத் தோன்றும்.

நிதானமாக பின்னோக்கி நடப்பதால் உடல், மனதுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இது உடல்நலத்தை மேம்படுத்தும் சிறந்த பயிற்சி என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.

முன்னோக்கி நடப்பதைவிடப் பின்னோக்கி நடக்கும்போது, காலை வீசி நடக்கும் அளவு குறைவாக இருக்கும். மூட்டு மற்றும் கணுக்கால் தசைகள் வலுவடைகின்றன.

தொடைக்குப் பின்னால் உள்ள தசை நார்கள் சீராக இயங்க உதவுகிறது. முதுகுவலி குறைய வாய்ப்புள்ளது. மூளையின் செயல்திறன் மேம்படுகிறது. உடல் எடையை சமநிலையில் வைக்க உதவுகிறது.

அதேவேளையில் பின்னோக்கி நடக்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி மனதுக்கும் நன்மைகள் கிடைக்கின்றன.

அடிக்கடி உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் ஒருவித சலிப்பைத் தவிர்க்க இது உதவுகிறது. மனநிலையை மேம்படுத்தி புத்துணர்ச்சியை அளிக்கிறது.

சிந்தனை திறன்களை பலப்படுத்தி, அறிவாற்றல் திறனை அதிகரிக்கிறது. பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.