மயோனைஸ்... நீங்க நல்லவரா? கெட்டவரா?
மயோனைஸ் இன்றி பார்பெக்யூ, கிரில், தந்தூரி சிக்கன், பிட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை நினைக்க முடியுமா?
நட்சத்திர விடுதியில் பரிமாறப்படும் பஃபே உணவுகள் துவங்கி ரோட்டுக்கடையில் உள்ள தந்தூரி சிக்கன் கடைவரை மயோனைஸ் தொட்டு சாப்பிட்டால்தான் சிக்கன் ருசி நாவிலேயே நிற்கும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மயோனைஸில் அதிக சோடியம் கலக்கப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படும் மயோனைஸில் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளதால் 50 வயது கடந்தவர்கள் இதனை உட்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதய கோளாறு உள்ளவர்கள், நீரிழிவு கொண்டவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. குளூடாமேட், பலவித பிரிசர்வேட்டிவ்கள், ஸ்டேப்லைசர் ரசாயனங்கள் இதில் உள்ளன.
எனவே பாக்கெட் மயோனைஸைத் தவிர்த்து வீட்டிலேயே மயோனைஸ் தயாரித்து உங்களுக்குப் பிடித்த உணவோடு சைட் டிஷ் ஆக சேர்த்து சாப்பிடலாம்.