கயாக்கிங் செல்ல...சென்னையிலே இருக்கு சூப்பர் ஸ்பாட் !

சென்னையிலிருந்து 39 கி.மீ தொலைவில் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள கோவளத்தில் உள்ளது இந்த பொழுதுபோக்கு அம்சம்.

கயாக்ஸ் எனப்படும் தனித்துவமான படகுகளைப் பயன்படுத்தி, அழகிய கடற்கரையை நோக்கி படகை செலுத்தி, அலைகளுக்கு நடுவே ஆடி மகிழ முட்டுக்காட்டில் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது.

இதற்கு இணையதளம் வாயிலாக அல்லது நேரில் சென்றோ முன்பதிவு செய்யலாம். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பிறகு உங்களுக்கு ஒரு கயாக், லைப் ஜாக்கெட் மற்றும் துடுப்பு கொடுக்கப்படுகிறது.

நீங்கள் கயாக்கில் ஈடுபடுவதற்கு முன்னரே திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களால் உங்களுக்கு ஒரு செயல்முறை வகுப்பு எடுக்கப்படும்.

பின்னர் நீங்கள் கயாக்கில், அலைகளுக்கு நடுவே ஆனந்தமாக துடுப்பை போட்டுக் கொண்டு கயாக் செய்யலாம்.