படுக்கையறையை பசுமையாக்கும் இண்டோர் பிளான்ட்ஸ் !

எப்போதும் பச்சை பசேலெனப் படரும் கொடி தாவரம் இங்கிலீஷ் ஐவி. ஜன்னல் மீது அல்லது தொங்கும் தொட்டியில் படர்ந்து வளரும்போது மிக அழகாக காட்சியளிக்கும்.

கண்களுக்கு இதமளிக்கும் அழகிய பூச்செடி ஃப்ளோரிஸ்ட் க்ரைசான்தமம். இதன் பூக்களின் இதழ்களுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.

வீட்டுக்கு அழகு சேர்க்கும் ஃப்ளெமிங்கோ லில்லி உங்களுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கும். அழகிய சிவப்பு மலரும் பளபளப்பான இலைகளும் கொண்ட ஃப்ளெமிங்கோ லில்லி, அதிக ஈரப்பதத்தை விரும்பும்.

வீட்டில் உள்ள காற்றில் நிறைந்திருக்கும் மாசுகள் மற்றும் நச்சுக்களை நீக்கும் செடிகளில் ப்ராட்லீஃப் லேடி பாம் முதன்மையாக உள்ளது. நச்சுக்களை நீக்கி காற்றை சுவாசிக்க உகந்ததாக இது மாற்றுகிறது.

கோல்டன் போதோஸ் எண்ணற்ற ரகங்களில் இருக்கிறது. 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நச்சுக்களை வெளியேற்றி காற்றை சுத்தப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த தாவரம்.

வீடுகளில் அலங்காரத்துக்காக அதிகம் வளர்க்கப்படும் இண்டோர் தாவரம் மூங்கில் பனைகள் தான். அதிகபட்சம் 20 அடி உயரம் வரை வளரக்கூடியது.