மாடர்ன் குந்தவையாக ஜொலிக்கும் த்ரிஷா

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன் - 1 படத்தின் மூலம் த்ரிஷாவின் புகழ் பலமடங்கு அதிகரித்துள்ளது. செல்லும் இடமெங்கும் த்ரிஷாவை குந்தவை என்றே ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார் அவர்.

இதற்காக த்ரிஷா அணியும் உடைகள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.

சமீபத்தில் நடந்த விழாவில், பழுப்பு நிற அனார்கலி சுடிதாரில் மாடர்ன் இளவரசி தோற்றத்தில் அனைவரையும் வியக்க வைத்தார். முத்து நெக்லஸ், ஜூம்கா காதணிகள் என நேர்த்தியான அலங்காரத்தில் ஜொலித்தார்.

துப்பட்டாவை தோள்களை சுற்றி தவழ விட்டிருக்கும் ஸ்டைல், இன்றைய டிஜிட்டல் உலகில் குந்தவையை நேரில் பார்த்தாற்போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது.

அதேப்போல், கோவையில் நடந்த விழாவில், டார்க் நீல நிற அனார்க்கலி சுடிதாரில் உற்சாகமாக வலம் வந்தார் த்ரிஷா.

ஃபுல் ஸ்லீவ், ஸ்டைலிஷான கொண்டையில் பாந்தமாக சூடியிருந்த மல்லிகை பூ என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார் அவர்.

ஏற்கனவே, இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் த்ரிஷா அணிந்திருந்த பளபளக்கும் நீல நிற புடவையும் டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.