ஸ்மார்ட் போன் அடிக்ஷனில் இருந்து விடுபடுவது எப்படி ?

டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகியிருப்பது, ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர உதவும் 8 எளிமையான வழிகளைபார்ப்போம்.

என்னென்ன தேவைக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

இலக்குகளை நிர்ணயித்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட் போன் பார்ப்பதை 10 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டுமென சிறிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.

மிக முக்கியமானவற்றிற்கு மட்டும் நோட்டிபிகேஷன் பெற முன்னுரிமை அளியுங்கள்.

குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் நேரம் அல்லது பொதுக் கூட்டங்களுக்கு செல்லும் போது ஸ்மார்ட் போன் பயன்படுத்த கூடாதென முடிவு எடுங்கள்.

புத்தகம் படித்தல், ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுதல், பொழுதுப்போக்கு விஷயங்களை செய்யலாம்.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தேவையற்ற மனஅழுத்தம், கவலையை போக்க, தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி போன்றவை தினமும் செய்து மனதை ஒருமுகப்படுத்துங்கள்.

பலமுறை முயற்சித்தும், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க முடியவில்லை எனில் உரிய தொழில்முனை வல்லுனர் உதவியையோ அல்லது ஆதரவு குழுக்களில் இணையுங்கள்.